முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மக்கள் கருத்து கேட்ட பிறகே கூடங்குளத்தில் 5,6-வது அணு உலைகள் - அமைச்சர் அறிவிப்புக்கு அணுஉலை எதிர்ப்பாளர்கள் வரவேற்பு

மக்கள் கருத்து கேட்ட பிறகே கூடங்குளத்தில் 5,6-வது அணு உலைகள் - அமைச்சர் அறிவிப்புக்கு அணுஉலை எதிர்ப்பாளர்கள் வரவேற்பு

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளை திறப்பது குறித்து மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருப்பதற்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :

கூடங்குளத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகளில் மின் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பது பற்றி அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தமிழ்நாடு பசுமைவழி மின்சாரத்தை நோக்கி செல்வதாகவும், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களின் கருத்துக்களை அறிந்த பிறகே புதிதாக அணு உலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருப்பதற்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்வதில் மக்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்கிய பிறகே, கூடுதல் அணு உலைகள் அமைக்க வேண்டும் என்று அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச் செல்வன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அணு உலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடியவர்கள் மீதான 26 வழக்குகள் மட்டும் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    First published:

    Tags: Koodankulam