தற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கடிதம்

திமுகவில் இருந்து தற்காலிக நீக்க உத்தரவிட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கடிதம்
கு.க. செல்வம் எம்.எல்.ஏ.,
  • Share this:
திமுகவில் இருந்து தன்னை தற்காலிகமாக நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தது தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்கும் முன்னரே கட்சியில் இருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது எனவும், ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also read: பணியின்போது உயிரிழந்த காவலர்: 12 லட்சத்து 50,000 நிதி திரட்டி காசோலை வழங்கிய சக காவலர்கள்..


திமுகவைச் சேர்ந்தவர்கள் மற்ற கட்சி தொண்டர்களையும் தலைவர்களையும் சந்திக்கக் கூடாதென்று எங்கும் குறிப்பிடவில்லை எனவும் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் கோட்பாடு எனவும் அவர் சுட்டிகாட்டினார்.

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை பாஜகவைச் சேர்ந்த பிரதமர் நேரில் வந்து பார்த்தது அனைவருக்கும் தெரியும் என்றும், கட்சியின் மாண்பை நான் மீறியதாகக் கூறுவது சரியல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கத் தாயாராக இருப்பதாகவும் கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading