பாஜகவில் இணைந்தார் கு.க.செல்வம்

கு.க.செல்வம்

கு.க.செல்வம் காரில் பாஜக கொடி கட்டப்பட்டுள்ளது.

  • Share this:
    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் பரப்பாகக் காணப்படுகின்றது. தேர்தல் ஏற்பாட்டு பணிகள் ஒருபுறம், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மறுபுறம் என வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், மாற்று கட்சியில் இருந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ளார் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்.

    திமுக பிரமுகர் ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பின் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என எதிர் பார்த்திருந்தார் கு.க.செல்வம். ஆனார், அந்த பொறுப்பில் சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் சந்திப் பேசினார்.

    அத்துடன் மு.க. ஸ்டாலினை விமர்சித்துப் பேட்டியும் அளித்தார். இதனால் அவரை இடைநீக்கம் செய்த திமுக தலைமை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அவரின் விளக்கத்தை நிராகரித்த திமுக, அவரைக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது.

    இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் திமுக கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவித்தார்.

    Must Read: சசிகலா இணைப்பு தொடர்பாக பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை - எல்.முருகன் விளக்கம்

     

    இந்நிலையில், கு.க.செல்வம் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அவரின் காரில் பாஜக கொடி கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: