#BREAKING | "என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்..." - கு க செல்வம் எம்.எல்.ஏ.

திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள் மேலும் பலர் திமுக-வில் இருந்து வெளியேறுவார்கள் என்று கு க செல்வம் பேசியுள்ளார்

#BREAKING |
திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள் மேலும் பலர் திமுக-வில் இருந்து வெளியேறுவார்கள் என்று கு க செல்வம் பேசியுள்ளார்
  • Share this:
"என் பிரச்னைக்கு உதயநிதிதான் காரணம்.. இன்னும் பலர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள்..." - கு க செல்வம் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திமுக-வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

விசாரணை மேற்கொள்ளாமல் நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது. என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. நேரில் விசாரனைக்கு வர சம்மதம் தெரிவித்த நிலையிலும் என்னை விசாரனைக்கு அழைக்கவில்லை என்றும் பேசியுள்ளார்.


மேலும் பேசிய அவர், "நான் வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை
ஏற்கனவே ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக 2 முறை தோல்வியடைந்த நிலையில் எனக்கு மக்கள் ஆதரவு இருந்தது மீண்டும் போட்டியிட்டால் வெற்றிபெரும் வாய்ப்பு எனக்கு உள்ளது
என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை. திமுக வில் இருந்து மூத்த நிர்வாகிகள் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள் மேலும் பலர் திமுக-வில் இருந்து வெளியேறுவார்கள். என்னுடைய பிரச்னைக்கு உதயநிதி தலையீடுதான் காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading