பாஜக தலைவர்களை தாக்கும் மதன் என்ன யோக்கியனா.. அரசியல் பச்சோந்தி – பாஜக நாளேடு கடும் விமர்சனம்

அண்ணாமலை - மதன்

செல்லும் இடத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்பவர் இந்த மதன் ரவிச்சந்திரன்

 • Share this:
  யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் அரசியல் பஞ்சோத்தி என பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ஒரே நாடு கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

  தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பாலியல் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன். இவர் பாஜகவின் உறுப்பினராக உள்ளார். பாஜகவில் அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டேன். இது பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தெரியும் அவருடைய ஒப்புதலில் பேரில்தான் வீடியோவை வெளியிட்டேன் என்றும் அதற்கு ஆதாரமாக சில வாட்ஸ்அப் சேட்களையும் வெளியிட்டார். ராகவன் கட்சிப்பதவியை ராஜினாமா செய்த நிலையில் மதன், வெண்பா இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

  இந்நிலையில் யூடியூபர் மதனை அரசியல் பஞ்சோத்தி என பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ஒரே நாடு கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. நம் நாடு இதழில், ‘ தமிழக பாஜக முக்கிய தலைவர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை ஒன்றை வெளியிட்டிருந்தார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன். இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்தும் அவரை தரம்  தாழ்ந்த வகையில் விமர்சித்துள்ளார். பாஜக தலைவர்களை குறிவைத்து தாக்கும் மதன் யோக்கியனா என்றால் கிடையாது. அப்பட்டமான சந்தர்ப்பவாதி.

  ஒரே நாடு நாளேட்டில் வெளியான கட்டுரை


  செல்லும் இடத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்பவர் இந்த மதன் ரவிச்சந்திரன். ஒரு தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வேலை செய்யவில்லை எதாவது பிரச்னையின் காரணமாக தூக்கியடிக்கப்பட்டவர் மதன். வின் தொலைக்காட்சி ஆதரவு கொடுத்தது.

  Also Read:  மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஆப்கான் குழந்தை - இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம் கொண்டாடும் நெட்டிசன்கள்

  திராவிட தலைவர்கள், திராவிட சிந்தாந்தங்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் தான் தூக்கியடிக்கப்பட்டதாக அனுதாபத்தை ஏற்படுத்தி திராவிட சிந்தாந்தங்களுக்கு எதிரானவர்களின் அனுதாபத்தை பெற்றார். அடைக்கலம் கொடுத்தது வின் டிவி என்பதையே மறந்து நான் இல்லையென்றால் அந்த டிவியே இல்லை என்பதுபோல் நிர்வாகத்திடம் அவமரியாதையாக நடந்துக்கொண்டு அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டார். இவருக்கு தேவையான குறிப்புகளை எழுதி தருவது அவரது தோழி வெண்பா.

  பின்னர் கிஷோர் கே சாமியிடம் தஞ்சம். அவர் தயவில் நெறியாளரானார். கிஷோர் கே சாமிக்கு எதிராக வேலை செய்ததால் அங்கிருந்தும் துரத்தப்பட்டார். பெரியாரிஸ்ட், தமிழ்தேசியம்,இந்துத்துவம், திராவிடம் என பத்திரிகையாளர் மதன் பேசாத போகாத இடமே கிடையாது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்டதால் திமுகவினரிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாஜகவில் இணைந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தோழியுடன் இணைந்து மதன் டைரி என்ற பெயரில் யூடியூப் சேனல். மாரிதாஸ் போல் பெரிய ஆள் ஆகலாம் என நினைத்தார்கள் மக்களிடம் இவர்களுக்கு வரவேற்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் இருவரும் காணாமல் போனார்கள். இப்போது திமுகவுக்கு அஞ்சி தஞ்சம் அடைந்த பாஜகவுக்கு எதிராகவே செயல்பட்டதால் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மதன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: