அதிமுகவை காட்டிக் கொடுத்த யாரும் விளங்கியது இல்லை - ராஜேந்திர பாலாஜி

அதிமுகவை காட்டிக் கொடுத்த யாரும் விளங்கியது இல்லை - ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சரும் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி அதிமுகவை காட்டிக் கொடுத்த யாரும் விளங்கியது இல்லை என்று கூறியுள்ளார்.

 • Share this:
  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சரும் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி அதிமுகவை காட்டிக் கொடுத்த யாரும் விளங்கியது இல்லை என்று கூறியுள்ளார்.

  கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுக ஆட்சிதான் தொல்லை இல்லாத ஆட்சி. பிறரை கெடுக்காத ஆட்சி, கட்டப்பஞ்சாயத்து செய்யாத ஆட்சி, பெண்களை கிண்டல் கேலி செய்யாத ஆட்சி. இந்த ஆட்சி எடப்பாடி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும்.

  முதலமைச்சரின் தாயாரை இழிவாக பேசுகின்றனர். நான் எவ்வளவு வேகத்தில் பேசினாலும் பெண்களை இழிவாக பேசமாட்டேன். பிறரை துன்புறுத்தி அதில் இன்பம் அடையும் கட்சி திமுக. அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள் நிர்வாகிகளை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள் இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.

  திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் தலை எடுக்க விடாமல் செய்ய வேண்டும். எடப்பாடி ஒரு அருமையான மனிதாபிமானம் மிக்க முதலமைச்சர். முதலமைச்சர் கண் கலங்குவதை பார்த்து நானும் கண் கலங்கினேன்.

  குடும்பத்தை தாக்கியவர்கள் அபாயகரமானவர்கள். ஸ்டாலின் ஆ.ராசாவை தூண்டி விட்டு பேச வைத்துள்ளார். 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து நல்லவர்களையும் கெட்டவர்களையும் பார்த்துவிட்டேன். நம்ப வைத்து ஏமாற்றிவர்கள், நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்கள் என அனைவரையும் பார்த்து விட்டேன்.

  சாத்தூர் வேட்பாளர் ராஜ வர்மன் குறுகிய காலத்தில் கொள்ளை அடித்து அரண்மனை போல், வீடு வைத்துள்ளார். 25 வருட அரசியல் வாழ்க்கையில் நான் அப்படி இல்லை. என்னை வஞ்சகம், சூது செய்து ஏமாற்றி, நம்ப வைத்து, உண்மையான விசுவாசிகளை என் பக்கம் அண்டவிடாமல் அனைவரது பிழைப்பையும் கெடுத்தவர் ராஜ வர்மன்.

  அதிமுக கொடியை 14 வயதில் பிடித்தேன். தற்போதுவரை நான் அதை விடவே இல்லை. என்னை பதவியை விட்டு இறக்கியபோதுகூட, நான் தலைமை சொல்படியே கேட்டு நடந்தேன். உங்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்து சேரும்.

  Must Read :  அரசியல் களத்தில் அதிமுக துண்டுடன் அமைச்சர் வேலுமணியின் மகன்

   

  அதிமுகவை காட்டிக் கொடுத்தவர்கள் யாரும் விளங்கியது இல்லை. ஏமாற்றுக் காரர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தொகுதியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.” என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: