கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரம்: காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டிஜிபி அலுவலகத்தில் புகார்

jothimani congress mp

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பா.ஜ.க-வினரால் பெண்கள் பெருமளவில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்" என்று ஜோதிமணி எம்பி கூறியுள்ளார்.

 • Share this:
  ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் மீது காங்கிரஸ் எம்பி ஜோதி மணி டிஜிபி அலுவலகத்தில் புகார்.

  பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பா.ஜ.க.வின் கே.டி. ராகவன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்ககோரி கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தமிழக காவல் துறை டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.

  இதையடுத்து செய்தியாளர்களிடம் ஜோதிமணி எம்பி கூறுகையில், "பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி ராகவனுடைய ஆபாச பாலியல் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. அவரை கைது செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.

  Also Read: மத்திய அமைச்சர் திடீர் கைது! – 20 ஆண்டுகளில் முதல் முறை…

  இதுபோன்ற புகார்கள் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் மீது எழுவது ஒன்றும் முதல் முறை அல்ல. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க-வினருக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

  கே.டி ராகவன் உட்பட பா.ஜ.க-வினர் யார் யாரால் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை முறையாக விசாரணை நடத்தி நியாயம் பெற்றுத் தரவேண்டும்.

  Also Read:   ஆப்கனுக்கு உக்ரைன் மக்களை மீட்கச் சென்ற பயணிகள் விமானம் ஈரானுக்கு கடத்தல்!

  இந்த அரசு பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கொடுக்கும் என முதலமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளதன் அடிப்படையில் காவல்துறை இயக்குநரை சந்தித்து முறையாக புகார் அளித்துள்ளோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பா.ஜ.க-வினரால் பெண்கள் பெருமளவில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்" என்று ஜோதிமணி எம்பி கூறியுள்ளார்.
  Published by:Arun
  First published: