பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா

கே.டி.ராகவன்

பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தனது ஃபேஸ்புக் பக்த்தில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தனது ஃபேஸ்புக் பக்த்தில் பதிவிட்டுள்ளார்.

  கே.டி.ராகவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்...நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன் ...என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது ...  இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்... நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்..குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்...சட்ட படி சந்திப்பேன் ..தர்மம் வெல்லும் .... என்றும் பதிவிட்டுள்ளார்.

  கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மேலும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: