100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி...! 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...?

100 அடி தூரத்திற்கு தாறுமாறாக சென்ற லாரி...! 20 பேரை காவு வாங்கிய கோர விபத்து நடந்தது எப்படி...?
  • News18
  • Last Updated: February 20, 2020, 11:07 AM IST
  • Share this:
அவினாசி அருகே இன்று அதிகாலை கேரள அரசுப்பேருந்து - கண்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணை தகவல்கள் கூறுகின்றன.

கேரளா அரசு விரைவுப் பேருந்து ஒன்று பெங்களூருவில் இருந்து திருப்பூர் வழியாக, ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை மூன்றரை மணியளவில் அவினாசி தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது, எதிரே சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பையும் உடைத்துச் சென்று பேருந்தின் மீது மோதியுள்ளது.

அத்துடன், மோதிய வேகத்தில் கண்டெய்னர், பேருந்து மீது சரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி உருக்குலைந்தது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பேருந்து ஓட்டுநர் உட்பட 20 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட 24 பேர் அவினாசி, திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்விடத்தில் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். தலைமறைவான கண்டெய்னர் லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக கேரளாவில் இருந்து சிறப்பு குழு அவினாசிக்கு விரைந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூக்கத்தில் கண் அயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், சாலைத்தடுப்பைத் தாண்டிச் சென்ற லாரி, தாறுமாறாக சென்று எதிரே வந்த பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியுள்ளது.இதற்கிடையே, விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காண குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால், பலர் தூக்கத்தில் இருந்ததாகவும், முன்பகுதியில் இருந்தவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றும், காயமின்றி தப்பிய ஒருவர் கூறியுள்ளார்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்