முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தி.மு.கவுடன் இணைந்து செயல்படுவோம்! காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி

தி.மு.கவுடன் இணைந்து செயல்படுவோம்! காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி

கே.எஸ்.அழகிரி (கோப்பு படம்)

கே.எஸ்.அழகிரி (கோப்பு படம்)

  • 1-MIN READ
  • Last Updated :

தி.மு.கவுடன் ஒற்றுமையுடனும் புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதவாத, பாசிச சக்திகளின் கைப்பாவையாக செயல்படுவர்களுக்கு எதிராக தி.மு.க மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழக காங்கிரஸ் துணை நிற்கும்.

தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழக தேர்தல் களத்தில் பல வெற்றிகளை குவித்துள்ளது. அந்த வெற்றியை தொடர, ஒற்றுமையுடன் இருப்போம். ஜனநாயகம் மற்றும் மக்கள் விரோத செயலில் ஈடுபடும் ஊழல் கட்சிகளை அம்பலப்படுத்தி, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published:

Tags: K.S.Alagiri