ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கம்! - இதுதான் காரணம்?

திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கம்! - இதுதான் காரணம்?

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

கட்சியில் கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக திமுக செய்தி தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதகிருஷ்ணன், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    திமுக செய்தி தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதகிருஷ்ணன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில்  மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கார்கே குறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு பிறகு நீக்கி விட்டார்.  கூட்டணி கட்சியான காங்கிரஸ் குறித்த சர்ச்சையான பதிவு, அக்கட்சியினர் மட்டுமல்லாது,  திமுக தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணனை  அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: DMK, Durai murugan