ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

சிறுமியை படுகொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
  • Share this:
தமிழக அரசு விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவி ஜெஸ்ரீ எரித்துக்கொள்ளப்பட்ட விவகாரம் குறித்து பேசிய கே.எஸ்.அழகிரி, ”மாணவி ஜெயஸ்ரீயை அதிமுக-வைச் சேர்ந்தவர்கள் உயிரோடு தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. ஈவு, இரக்கமற்ற முறையில் சிறுமியை படுகொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

மகளை இழந்து தவிக்கும் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி செய்யவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading