• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல், டீசல் மீதான வரியை கடுமையாக உயர்த்தியது ஏன்? - கே.எஸ்.அழகிரி கேள்வி

பெட்ரோல், டீசல் மீதான வரியை கடுமையாக உயர்த்தியது ஏன்? - கே.எஸ்.அழகிரி கேள்வி

கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர். (படம்: Facebook)

கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர். (படம்: Facebook)

”வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூர போக்கு கொண்ட அரசாக நரேந்திர மோடியினுடைய அரசு விளங்கி வருகிறது” என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை குறித்து குறிப்பிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி , "ரோம் நகரம் தீப்பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல கொரோனாவின் கோரப்பிடியில் மக்கள் சிக்கி தவித்து கொண்டிருக்கும் போது பெட்ரோல், டீசல் மீது கலால் வரியை கடுமையாக உயர்த்தியது ஏன்?

    வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூர போக்கு கொண்ட அரசாக நரேந்திர மோடியினுடைய அரசு விளங்கி வருகிறது. இந்த விலை உயர்வு ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தியுள்ளது.

    Also see:

    இந்தச் சுமையை அகற்றுகிற வகையில் பெட்ரோல் டீசல் விலையுர்வை திரும்ப பெறவில்லையெனில் மக்களின் கோபத்திற்கு ஆளாகி, மத்திய பா.ஜ.க. அரசு எதிர்காலத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்துவிடும் என்பதை எவரும் மறுக்க முடியாது’ என்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: