சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கே? - கே.எஸ். அழகிரி கேள்வி..!

"சமீபகாலமாக பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார்."

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கே? - கே.எஸ். அழகிரி கேள்வி..!
கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்.
  • Share this:
பத்திரிகையாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் பார்வையில் தென்படவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவு: "கொரோனா நோயை எதிர்த்து சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பணியாளர்கள், தங்களை நோய் தொற்றிவிடும் என்கிற கவலை கடுகளவும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

ஆனால் தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் நேற்று மாலை புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார்.


ஆனால் சமீபகாலமாக பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்."

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading