Home /News /tamil-nadu /

ஏழுபேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் உடன்பாடு இல்லை - கே.எஸ்.அழகிரி

ஏழுபேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் உடன்பாடு இல்லை - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், உடன்பாடு இல்லை என்றும், அவர்கள் விடுதலையில் அரசியல் அழுத்தம் இருக்க கூடாது எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “21ஆம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை அழைத்து சென்றவர் ராஜிவ் காந்தி என்றும், தொழில்துறையில் மாபெரும் சாதனையை உருவாக்கிய அவர், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

  நேற்றைய தினம் எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது என்றும், ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்களே செய்ய வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தம் கொடுக்க கூடாது என்று கூறி வருவதாகக் கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர், தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். எனவே தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக 7 பேரை மட்டும் விடுதலை செய்வது என்பது ஏற்புடையது அல்ல என்று கூறிய கே.எஸ்.அழகிரி, திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே எழுவர் விடுதலை குறித்து வாக்குறுதி அளித்து இருந்தனர், ஆனால் காங்கிரஸ் கட்சி அதுகுறித்து எதுவும் வலியுறுத்தவில்லை என்றும் கூறினார்.

  அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்வில் எந்தவித காலதாமதமும் இல்லை என்று கூறிய அழகிரி, இதுகுறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

  நேற்று, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேரில் அளித்தார்.

  அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அதை தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியதை ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

  அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளதாக தமிழக ஆளுநர் 2021 மே மாதம் கடிதம் எழுதியதையும், கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைகளில் கூட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில், கைதிகளை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  Must Read : தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

   

  அத்துடன், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்ட நிலையில் குடியரசுத் தலைவருக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published:

  Tags: KS Alagiri, MK Stalin, Perarivalan, Rajiv Gandhi Murder case

  அடுத்த செய்தி