காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறது மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறது மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கே.எஸ்.அழகிரி

புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பி இருந்தார். தற்போது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார்.

 • Share this:
  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி நிருபர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு கவர்னர் முலம் முயல்வதாக குற்றம் சாட்டினார்.

  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பி இருந்தார். தற்போது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார்.

  கிருஷ்ணரை கொல்ல பெண்களை பல்வேறு உருவங்களில்தான் அனுப்பினார்கள். எல்லா முயற்சிகளிலும் கிருஷ்ணர் தப்பித்தார். ஆனால் அந்த பெண்கள்தான் தப்பிக்க முடியாமல் போனார்கள். நாராயணசாமியை அமைச்சரவையில் இருந்து அனுப்புவதாக சொல்லி முயற்சித்தார். ஆனால் கிரன்பேடி வெளியே போய்விட்டார்.

  தமிழிசைக்கு என்ன நிகழ போகிறதோ தெரியவில்லை. இது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல். கிரண்பேடி மீது என்ன குற்றத்தை மோடி கண்டுபிடித்தார். நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக் சொன்னபோது நடவடிக்கை எடுக்காமல் இப்போது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன. ஆளுநரை வெளியே அனுப்பி மற்றொருவரை அனுப்பும்போது காரணத்தை மக்களிடம் உள்துறை அமைச்சகம் சொல்ல வேண்டாமா.

  அன்றைக்கே வெளியே மோடி அனுபி இருந்தால் வரவேற்று இருக்கலாம். கிரன்பேடி செயலை வேறு வடிவத்தில் செய்ய வேறு ஒருவர் அனுப்பப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தபோதும் ரூ.71க்கு விற்பனை செய்தோம். தற்போது கச்சா எண்ணெய் விலை 54 டாலருக்கு வீழ்ச்சி அடைந்ததும் ரூ. 92க்கு பாஜக அரசு விற்பனை செய்து வருகிறது.

  6 ஆண்டுக்காலத்தில் 20லட்சம் கோடி வரி விதித்து அரசுக்கு சேர்த்துள்ளனர். பிரதமர் மோடி பேசும் போது எரிசக்தியை சேமிக்காமல் உள்நாட்டில் உற்பத்தி எப்படி செய்ய தெரியாமல் இறக்குமதி செய்வதை நம்பி இருந்ததால் பின்னடைவு என்று சொல்லி உள்ளார். இது முற்றிலும் தவறானது. உள்நாட்டில் எவ்வளவு எரிவாயு, எரிசக்தி எடுக்க முடியுமோ இந்திய பொது துறை நிறுவனங்கள் வெற்றிக்கரமாக செய்து உள்ளன.

  இந்திய இயற்கை வளம் எரிசக்தி பிற நாடுகளை நம்பி இருப்பதுதான். மக்களுக்கு சிரமம் வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மானியம் வழங்கப்பட்டது. மோடிக்கு பொருளதாரம் தெரியாததால் தவறாக வரி விதிப்பின் முலம் வழிநடத்துகிறார். மக்களுக்கு பொய்யான தகவலை தருகிறார். தோல்வியை மோடி அரசு ஒத்துக் கொள்ள வேண்டும்.

  தேர்தல் அறிவித்ததும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு அதிக இடம் கேட்க இருக்கிறோம். பெட்ரோல், டீசல் போராட்டம் விரைவில் நடத்தப்படும். பாஜகவில் நடிக்க ஆட்கள் இல்லாததால் நடிகர், நடிகைகளை சேர்க்கின்றனர். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

  Must Read : புதுச்சேரி வரலாற்றில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்ட முதல் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
  Published by:Suresh V
  First published: