தமிழர்கள் ஒற்றுமையைதான் விரும்புவார்கள்... பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி கண்டிக்கத்தக்கது - கே.எஸ். அழகிரி

கே.எஸ்.அழகிரி

பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சிகளை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்றும், தமிழகத்தின் வெற்றியே அது பரந்துபட்ட தமிழகமாக இருப்பதில்தான் உள்ளது என்றும் அழகிரி கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் கேரள ஆளுநருமான பேராசிரியர் பா. ராமசந்திரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள்விழா, சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் பா.ராமச்சந்திரனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

  இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் பொன். கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தன், ஆர்.தாமோதரன் மற்றும் கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் வரலாற்றில் மிக சிறப்பான இடத்தைப் பெற்றவர் பா.ராமச்சந்திரன். அவர், அரசியல் தலைவராக மட்டுமில்லாமல் ஒரு போராளியாகவும் இருந்து வந்தார் என்று கூறினார். மேலும், தேசியத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு தோழர். பா.ரா.வின் புகழ் ஓங்க வேண்டும் என்றும் மற்றும் பா.ராவை போல் 100 பா.ரா.க்கள் உருவாக வேண்டும் என்று கூறினார்.

  மேலும், கொங்கு மண்டலத்தை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றப்போவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்களின் கோள்விக்கு, “தமிழர்கள் ஒற்றுமையை தான் என்றும் விரும்புவார்கள், இதுபோன்ற பிரிவினை வாதங்களை ஏற்க மாட்டார்கள். பாஜகவின் இம்மாதிரியான பிரித்தாளும் சூழ்ச்சிகளை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்றும், தமிழகத்தின் வெற்றியே அது பரந்துபட்ட தமிழகமாக இருப்பதில்தான் உள்ளது” என்று கூறினார்.

  இந்நிலையில், கோவையில் கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “12 மாவட்டமாக இருந்த தமிழகம் தற்போது 38 மாவட்டமாக பிரிந்து 34 அமைச்சர்கள் இருக்கின்றனர். கொங்குநாடு பகுதியில் விகிதாச்சார அடிப்படையில் எதுவும் நடக்கவில்லை.

  Read More : அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - ரஜினிகாந்த் திட்டவட்டம்!

  தமிழகத்தில் வரி வருவாய் 66 சதவீதம் கொங்குநாட்டின் 11 மாவட்டங்களில் இருந்து அரசுக்கு செல்கின்றது. வருவாயை பெற்றுக் கொண்டு பகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை. நிர்வாக வசதிக்காக கொங்குநாடு பகுதியை தனி மாநிலமாக பிரித்தால் இன்னும் வளர்ச்சி ஏற்படும். 1976-ல் இருத்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றோம். கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

  Must Read : ஸ்புட்னிக் வி தடுப்பூசி டெல்டா வைரசிடம் இருந்து எந்த அளவிற்கு பாதுகாக்கும் திறன் கொண்டது? - விஞ்ஞானிகள் விளக்கம்

  கொங்குநாடு என்பது கவுண்டர் சமுதாயத்திற்கு மட்டுமானதல்ல. கொங்கு நாட்டில் வாழும் அனைவருக்குமானது. தனிநாடு கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கின்றோம். கொங்குநாடு குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்து இருப்பது அவரது சொந்த கருத்து. கொங்கு நாடு கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப இருக்கின்றோம்.” என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: