நல்ல பண்பு, நல்ல நடத்தையை பற்றி குஷ்பு பேச கூடாது என கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “திமுகவுடன் கூட்டணி தொகுதி பேச்சுவார்ததை 2 முறை நல்லமுறையில் நடந்துள்ளது. நாளை மீண்டும் பேச்சுவார்ததை நடக்க இருக்கின்றது.
பந்து திமுக கையில் உள்ளது. அந்த பந்தை பயண்படுத்துவது அவர்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில், காங்கிரஸ்-திமுக 25 ஆண்டுகால கூட்டணி தொடந்து வருகின்றது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சாரக வர வேண்டும் என்ற அடைப்படையில் இந்த கூட்டணி தற்போது அமைந்துள்ளது.
பாஜகவிடம் இருந்து இந்தியாவை மட்டுமல்ல, எதிர் கட்சியினையும் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைந்த கூட்டனி இது. 2021 சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட வில்லை.
நல்ல தலைமை, நல்ல பண்பு, நல்ல நடத்தை, நல்ல செய்கையை போன்றவை பற்றி குஷ்பு பேசவே கூடாது என கே.எஸ்.அழகிரி பேட்டி அப்போது கூறினார்.
Must Read: எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு - பா.ஜ.கவில் இணைகிறாரா சுந்தர்.சி
காங்கிரஸ் கட்சியல் இருந்த குஷ்பு சில மாதங்களுக்கு முன்னர் அந்த கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் குஷ்வு கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.