• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது - கே.எஸ்.அழகிரி

கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கமல்ஹாசன் தனித்து நின்றால் அது பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் என்றும், கமல்ஹாசனை பீ டீம் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

  • Share this:
    கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது என்று கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், ராகுல் காந்தி வருகின்ற 23 முதல் 25 ஆம் தேதி வரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். சீரழித்த ஆட்சியை மாற்றுவது, மதச்சார்பற்ற கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் ராகுல் காந்தி 5 முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றார்.

    பாஜக - அதிமுக கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்று கூறிய அழகிரி, தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய ஊழல் ஆட்சி நடைபெற்றது இல்லை என்று குற்றம் சாட்டினார்.

    வெற்றி வாய்ப்புள்ள தொகுதிளை கூட்டணி கட்சிகளுக்கு தரக்கூடாது என்ற உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்த கேள்விக்கு, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்பினார். எனவே, கூட்டணியில் எல்லோரும் பகிர்ந்து கொள்வது தான் சிறப்பு என்றும், கூட்டணி கட்சிகளுக்கு வெவ்வெறு வேறுபாடுகள் உள்ளது என்றும் குறிப்பிட்ட கே.எஸ்.அழகிரி, வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும் என்றார். மதச்சார்பின்மை என்றை ஒற்றை நேர்கோட்டில் கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றார். இதுபோன்ற சிறு சிறு பிரச்சனை பேசி தீர்த்துக் கொள்வோம் என்றும், அது ஒரு பிரச்சனையே இல்லை என்றும் கூறினார்.

    மேலும் படிக்க... சசிகலாவை மருத்துவர்கள் நன்றாக கவனித்து வருகின்றனர் - டி.டி.வி.தினகரன்

    மேலும், கமல்ஹாசன் தனித்து நின்றால் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் என்றும், கமல்ஹாசனை பீ டீம் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினார். கமல்ஹாசனால் எங்களது கூட்டணி வாக்கு வங்கி பாதிக்ககூடாது என நினைக்கிறோம் என்றும், மக்கள் நீதி மய்யம் மழலை கட்சி என்றும், கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது என்றும் கருத்து தெரிவித்தார். மேலும், மூன்றாவது அணி தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்றும் கூறினார்.

    சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது என்றும், சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறிய அழகிரி, ஒபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக விளம்பரம் தருகின்றனர். ஒரே கட்சியில் இருவர் விளம்பரம் தருவது இதுவரை அதிமுகவில் இல்லை என்றும் கூறினார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது. ஆதரிக்கவும் செய்யாது. நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: