ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து டெல்லி தலைமையும், திமுகவும்தான் முடிவு செய்யும் - கே.எஸ். அழகிரி

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து டெல்லி தலைமையும், திமுகவும்தான் முடிவு செய்யும் - கே.எஸ். அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது தான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் சமூக நீதி பேசும் பாமக எப்படி சமூக நீதிக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கலாம் எனவும் கேள்வி எழுப்பினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் அணியின் மாநில செயற்குழுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, மீனவர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, ‘‘திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்துக்கு தலைமைச் செயலகத்தை சூரையாடிய, அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது தான் சந்தர்ப்பவாதக் கூட்டணி. சமூக நீதி பேசும் பாமக எப்படி சமூக நீதிக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கலாம்.

  திருநாவுக்கரசர், விஜயகாந்த் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு தான். கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்த டெல்லியில் உள்ள தலைமையும், தமிழகத்தில் திமுகவும் தான் முடிவு செய்யும்.

  ஏழுபேர் விடுதலையில் நீதிமன்றமே கருத்து கூறிவிட்டது, அதை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்யப் போவதில்லை. ஏற்கனவே அவர்கள் 20ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டனர். அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை’’ என்றார் கே.எஸ். அழகிரி.

  Also Watch: அதிமுகவை கிண்டலடித்த கமல்ஹாசன்

  Published by:Anand Kumar
  First published:

  Tags: K.S.Alagiri, Lok Sabha Election 2019