ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கூட்டணி குறித்து விரைவில் சுமூகமான முடிவு எடப்படும் என நம்புகிறோம் - காங்கிரஸ்!

கூட்டணி குறித்து விரைவில் சுமூகமான முடிவு எடப்படும் என நம்புகிறோம் - காங்கிரஸ்!

தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனையில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சியினர்.

தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனையில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சியினர்.

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமையுடன் பேசிவிட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, தேசிய செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனையில் ஈடுபட்டனர். கட்சியின் தேசிய தலைமைக்கு தகவல்களை தெரியபடுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சத்தியமூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதன் பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அடுத்தகட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.  தமிழக தேர்தல் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. தமிழகத்தின் கலச்சாரம், அடையாளம், மொழி ஆகியவற்றை காப்பதற்கான தேர்தல், மக்களுக்கான தேர்தல். தமிழகம் மற்றும் புதுவையில் பா.ஜ.க நுழைய முயல்கிறது. அதை தடுக்க வேண்டும். பாஜகவால் தமிழகத்திற்கு வளர்ச்சியை தர முடியாது. பிரிவினைவாத சக்திகள் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக்கூடாது. பா.ஜ.க அல்லது அதன் கூட்டணி கட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்க மாட்டார்கள் என்றார்.

Also read... எம்.பி., கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு...!

பின்னர் பேசிய தினேஷ்குண்டுராவ், எங்கள் விருப்பத்தையும், கூட்டணியை பலப்படுத்தும், ஆதரவை, எண்ணத்தையும் தெரிவித்தோம். பா.ஜ.க தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக்கூடாது. அதற்காக கூட்டணிக்கு முழு ஆதரவையும் கொடுப்போம் என தெரிவித்திருக்கிறோம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவில் சுமூகமான முறையில் அனைத்தும் முடியும் என எதிர்பாக்கிறோம் என்றார்.

கே.எஸ்.அழகிரி பேசுகையில், திமுக உடன் கூட்டணி குறித்து விவாதித்தோம். நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடத்தது. மகிழ்ச்சியாக இருந்தது. உடன்பாடாக, இணக்கமாக இருந்தது. அந்த இணக்கம் தொடர இருவரும் விரும்புகிறோம். எங்கள் கருத்தை சொல்லி இருக்கிறோம். அவர்களும் கருத்தை சொல்லி இருக்கிறார்கள். இரண்டு தரப்பும் அவரவர் தலைவர்களோடு பேசிவிட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: K.S.Alagiri