ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வசந்தகுமார் எம்.பி., உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அரசு தடையா? கே.எஸ் அழகிரி விளக்கம்..

வசந்தகுமார் எம்.பி., உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அரசு தடையா? கே.எஸ் அழகிரி விளக்கம்..

வசந்தகுமார் எம்.பி

வசந்தகுமார் எம்.பி

அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் காமராஜர் அரங்கத்திற்கு முன்னால் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார் கே.எஸ் அழகிரி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நேற்று மாலை உயிரிழந்தார். இதையடுத்து இன்று காலை அவரது உடல் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

  இதையடுத்து காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொதுமக்கள் தொண்டர்கள் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை முதலே மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

  டெல்லி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்துவதாக இருந்தது.மதியம் 2 மணிவரை சத்தியமூர்த்தி பவனில் அவரது உடலை வைத்துவிட்டு பின்னர் நாகர்கோவிலுக்கு எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.

  ஆனால் சரியாக 11 மணிக்கு மேடைக்கு வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி பேசும்போது, நேரமில்லாத காரணத்தால் வசந்தகுமாரின் உடலை சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு வர வாய்ப்பில்லை.அவரது மனைவி குறிப்பிட்ட நேரத்திற்குள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அவரது உடல் அண்ணா சாலை வழியாக நாகர்கோவில் நோக்கி செல்கிறது.

  அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் காமராஜர் அரங்கத்திற்கு முன்னால் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

  மேலும் படிக்க: ”இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்பவே முடியாது அண்ணாச்சி” - ஜோதிமணி எம்.பி

  அரசின் சார்பில் இதற்கு அனுமதி இல்லையா என்று கேட்டதற்கு, அரசு எந்த தடையும் சொல்லவில்லை, நேரமில்லாத காரணத்தால் இத்தகைய சூழல் உருவாகி இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளிடம் கேட்டபோது ஊரடங்கு காலத்தில் நோய் பரவலுக்கு இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சி வழிவகுத்துவிடும் என்பதால் அரசின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தொண்டர்கள் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

  Published by:Gunavathy
  First published:

  Tags: K.S.Alagiri, Vasanthakumar MP