ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மோடி, அமித்ஷாவை விமர்சித்தால் கைது: ராஜீவ் காந்திக்கு கைதில்லையா? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

மோடி, அமித்ஷாவை விமர்சித்தால் கைது: ராஜீவ் காந்திக்கு கைதில்லையா? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

கே.எஸ்.அழகிரி (கோப்பு படம்)

கே.எஸ்.அழகிரி (கோப்பு படம்)

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மோடி, அமித்ஷாவுக்கு எதிராகப் பேசினால் கைது செய்கிறீர்கள். ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

  பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணனைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு

  காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

  மோடி, அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் கைது!

   சீமான் பேச்சு குறித்துக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி, அமித்ஷாவுக்கு எதிராகப் பேசினால் உடனடியாக கைது செய்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை. நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: K.S.Alagiri