ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லை கல்குவாரி சட்டவிரோதமாக நடந்தது என கூறும் அதிகாரியை தூக்கிலிட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

நெல்லை கல்குவாரி சட்டவிரோதமாக நடந்தது என கூறும் அதிகாரியை தூக்கிலிட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

KS Alagiri : நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் நிதி அறிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் சிக்கி காயமடைந்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். 

  நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில்  ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்த முருகன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி,  நெல்லையில் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து கவனக்குறைவு காரணமாக ஏற்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் குவாரிகளில் விதிமுறை மீறல்கள் உள்ளதா என அரசு ஆய்வு செய்ய வேண்டும், அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

  நெல்லை கல்குவாரி சட்டவிரோதமாக நடந்தது என கூறும் அதிகாரியை தூக்கிலிட வேண்டும். அதிகாரிகள் மெத்தனப் போக்கே விபத்திற்கு காரணம். இந்த விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளோம்.

  நெல்லையில் கல்விக்கு வித்திட்ட காமராஜர், பசுமைப்புரட்சியை கொண்டுவந்த இந்திராகாந்தி சிலை திறப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் . இருவரும் மக்களிடம் தங்களை பதிவு செய்து கொண்டவர்கள். காங்கிரஸ் 100 ஆண்டு கால இயக்கம் அன்னை சோனியாகாந்தி 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத பொறுப்பை வழங்க வேண்டும்  என்று  கூறியுள்ளார். இதனால் மக்கள் பிரச்சனையை அறிய வாய்ப்பு உள்ளது.

  Must Read : அண்ணாமலை கிரிமினல்களை எல்லாம் பிடித்து பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் - டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

  ஆர்.எஸ்.எஸ். இயக்கம்  நமது மதத்தை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என புதிய கொள்கையை கூறுகிறார்கள். நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ் கையில் ராமர் இருந்த போது அமைதி நிலவியது, ஆர்.எஸ்.எஸ் கையில் ராமர் இருக்கும் போது கலவரம் ஏற்படுகிறது .மதம், கடவுள் பெயரில் அரசியல் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் எம்.பி,  உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர் - ஐயப்பன்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Congress, KS Alagiri, Quarry, Thirunelveli