• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எங்கள் அணிக்கு வாருங்கள்: கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த கே.எஸ்.அழகிரி

எங்கள் அணிக்கு வாருங்கள்: கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த கே.எஸ்.அழகிரி

கே எஸ் அழகிரி

கே எஸ் அழகிரி

மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ள எங்களுடன் கமல் சேர வேண்டும். பிரிந்து நின்றால் அது ஓட்டுக்களை சிதறடிக்கும் என கே.எஸ். அழகிரி. கூறியுள்ளார்.

  • Share this:
    எங்கள் கூட்டணிக்கு நடிகர் கமல்ஹாசன் வர வேண்டும் என திருப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார்.

    இம்மாதம் 23 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல்காந்தி கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு திருப்பூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அழகிரி, “ராகுல்காந்தியின் வருகை கொங்கு மண்டலத்தில் எழுச்சிகரமானதாக இருக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை விட 5 மடங்கு அதிக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். பொதுமக்களை சந்திக்க வரும் அவர் கோவையில் தொழில்துறையினருடனும், திருப்பூரில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    ராகுல் காந்தி மதுரை வந்தபோது கூட்டணி கட்சியினரை சந்திக்கவில்லை. இப்போது சந்திப்பாரா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகிரி, அவர் பொதுமக்களை சந்திக்கத்தான் வருகிறார். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி தலைவர்களை சந்திப்பார் என்று பதிலளித்தார்.

    மேலும் படிக்க... தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு - ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

    புதுச்சேரியில் எத்தகைய அரசியல் சூழல் நிகழ்ந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அங்கு நண்பர்களுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறோம். தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

    அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பின்னிலைக்கு வந்து விட்டார் என்று விமர்சித்த அழகிரி, அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோபைடன், தடுப்பூசியை தனக்கு முதலில் போட்டுக்கொண்டார். இதேபோல் நமது பிரதமரும், போட்டிருந்தால் சந்தேகத்துக்கு இடம் இருந்திருக்காது என்றார்.

    காங்கிரசுக்கு நடிகர் ரஜினிகாந்தை அழைத்தோம் என்றும், ஆனால் பாஜகவின் அழுத்தம் அவரை ரத்த அழுத்தம் வரை கொண்டு சென்று விட்டது என்றும் கூறிய அவர், ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் காங்கிரசுக்கு உண்டு என்றும், திமுக கூட்டணியோடு எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    மேலும், மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்போம் என்றும், மிகப்பெரிய அணியாக இருக்கும் எங்களுடன் கமல் சேர வேண்டும். பிரிந்து நின்றால் அது ஓட்டுக்களை சிதறடிக்கும் என்று கூறி கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தார் கே.எஸ். அழகிரி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: