ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காங்கிரசுக்கு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 74 பானைகளில் பொங்கல் வைக்கும் விழாவைத் தொடங்கி வைத்த பின்னர், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி லால் பகதூர் சாஸ்திரி, திருப்பூர் குமரன் ஆகியோரின் நினைவுநாளையொட்டி, அவர்களது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, பாஜக எத்தகைய அழிவு சக்தி என்பதை பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெளிவுபடுத்தி உள்ளதை, அதிமுகவும் அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என்றும், முதலமைச்சர் வேட்பாளரைக் கூட தெளிவாகத் தேர்வு செய்ய முடியாத நிலையில் அதிமுக அணி உள்ளதாகவும் கூறினார்

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காங்கிரசுக்கு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பேசிய கே.எஸ்.அழகிரி, திருவள்ளுவர், பெரியார் போன்றோருக்கு தமிழ்நாட்டில் காவி சாயம் பூசுவதைப் போன்ற இழிசெயல் தான் இலங்கையிலும் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Also read... அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தான் முடிவு செய்யும் என்று அக்கட்சியின் வானதி சீனிவாசன் பேசியது குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேரடியாக கேட்க வேண்டும் என்று கூறிய கே.எஸ்.அழகிரி, அதன் பின் கே.பி.முனுசாமியின் கருத்துக்கு பதிலளிக்க தாம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தம் மீதான ரூ.3,500 கோடி ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க விடாமல் முதலமைச்சர் பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய கே.எஸ்.அழகிரி, இன்னும் 15 நாட்களில் தடையாணையை உடைத்து வழக்கு விசாரணையை சி.பி.ஐ. தொடங்காவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: AIADMK, KS Alagiri