Home /News /tamil-nadu /

தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள்.. ஒன்று அண்ணாமலை, மற்றொன்று ஆர்.என்.ரவி - கே.எஸ் அழகிரி விமர்சனம்

தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள்.. ஒன்று அண்ணாமலை, மற்றொன்று ஆர்.என்.ரவி - கே.எஸ் அழகிரி விமர்சனம்

கே. எஸ். அழகிரி குற்றச்சாட்டு

கே. எஸ். அழகிரி குற்றச்சாட்டு

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக எதையும் செய்யக் கூடியவர். தமிழகத்தில் அக்கட்சிக்கு இரண்டு மாநில தலைவர்கள் இருக்கிறார்கள். ஒன்று அண்ணாமலை, மற்றொன்று ஆளுநர் ரவி. அண்ணாமலையை விட ஆளுநர் ரவி பாஜகவின் மாநில தலைவராக சிறப்பாக செயல்படுகிறார்” என கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India
    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய மக்கள் ஒற்றுமை நடைபயணம் என்ற பாதயாத்திரையை தமிழகத்தில் அடுத்த மாதம் ஏழாம் தேதி துவங்குகிறார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பாதயாத்திரையில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. பெருந்திரளாக பாத யாத்திரையில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது

    இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது, "மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி என்ற பெயரால் வியாபாரிகள் கசக்கி பிழியப்படுகிறார்கள் மன்மோகன் சிங் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தது தற்போது ஏழு சதவீதத்திற்கும் குறைவாகவே வளர்ச்சி உள்ளது. வரும் ஏழாம் தேதி தமிழகத்தில் துவங்கக்கூடிய யாத்திரை நான்கு நாட்கள் தமிழகத்தில் நடைபெறுகிறது இந்த யாத்திரை அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    Also Read : பாலியல் அத்துமீறல்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என மிரட்டிய போலி டாக்டர்!

    குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் பதவி வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். இவர் போன்றவர்கள் விலகி செல்வதால் காங்கிரஸ் கட்சி சுத்தமடைந்து வருகிறது. அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் தலைவர் இல்லை என்ற கருத்து தவறானது, சோனியா காந்தி கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். கொரோனா காரணமாக இரண்டரை ஆண்டுகளாக பொதுக்குழு கூட்டப்படவில்லை அதன் காரணமாகவே தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக எதையும் செய்யக் கூடியவர். தமிழகத்தில் அக்கட்சிக்கு இரண்டு மாநில தலைவர்கள் இருக்கிறார்கள். ஒன்று அண்ணாமலை, மற்றொன்று ஆளுநர் ரவி. அண்ணாமலையை விட ஆளுநர் ரவி பாஜகவின் மாநில தலைவராக சிறப்பாக செயல்படுகிறார்” என கூறினார்.

    மேலும், ராகுல் காந்தி மீது அதிக அளவில் விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, “யார் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகிறார்களோ அவர்களே சிறந்த தலைவர்களாக விளங்கியுள்ளனர். மகாத்மா காந்தி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் அவர்தான் நாட்டின் மிகச்சிறந்த தலைவராக விளங்கினார். தற்போது ராகுல் காந்தி மீது தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது அவர் மிகச்சிறந்த தலைவராக செயல்பட்டு வருவதையே அது காட்டுகிறது.

    முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை விட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்வது துரோகமாக பார்க்கப்பட்டது தற்போது அந்த சூழல் சாதாரண விஷயமாகிவிட்டது சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Annamalai, BJP, KS Alagiri, RN Ravi

    அடுத்த செய்தி