மோடி, அமித்ஷாவை மகிழ்விக்கவே வைகோ அப்படி பேசியுள்ளார் - கே.எஸ். அழகிரி கண்டனம்

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 9:25 PM IST
மோடி, அமித்ஷாவை மகிழ்விக்கவே வைகோ அப்படி பேசியுள்ளார் - கே.எஸ். அழகிரி கண்டனம்
கே.எஸ். அழகிரி vs வைகோ
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 9:25 PM IST
மோடியை மகிழ்விக்கவே வைகோ காங்கிரஸுக்கு எதிராக பேசியுள்ளார் என்று  கே.எஸ். அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ”வைகோ அவர்கள் மீது எந்த வன்மமும் கிடையாது, எனது அன்பிற்கும் மரியாதைக்கு உடைவர் வைகோ.
ஒரு முறை சீமான் அவர்கள் வைகோ அவர்கள் தமிழரே அல்ல என்று கூறினார். அதனை மறுக்கும் வகையில் அப்போது தமிழக காங். தலைவராக இருந்த திருநாவுகரசரிடம் அரசியல் தவறாக செல்ல கூடாது எனவும் வைகோவை பற்றி தவறாக கூரிய சீமானை காங். சார்ப்பில் கண்டித்தோம்.


வைகோவின் பேச்சு மிகவும் பிடிக்கும், காங். தயவில் வைகோ எம்.பி ஆனார் என நான் கூறவில்லை, முன்னாள் தலைவர் ஈ.விகே.எஸ் இளங்கோவன்தான் கூறினார்.

எங்கள் ஓட்டு மறைமுகமாக வைகோவிற்கு போயிருக்கிறது, அதனை அவர் மறுக்ககூடாது. அது தர்மம் இல்லை.

மோடியை, அமித்ஷாவை மகிழ்ச்சியடைய செய்ய வைகோ நன்கு தெரிந்து வைத்துள்ளார். அதனால், காங். -க்கு எதிராக பேச போகிறேன் என்று வைகோ பேசுவதற்கு நேரம் கேட்டார். அதற்கு அமித்ஷாவும் நேரம் ஒதுக்க சபாநாயகரிடம் கேட்டது எல்லாம் எனக்கு தெரியும்.

Loading...

மாநிலங்களவையில் இவர் போன்று ஒருவர் இருந்தால், பிரச்னையை திசை திருப்ப பயன்படுத்திகொள்கிறார்கள் பாஜகவினர். 370 பிரிவு நீக்கியது சரியா, தவறா என பேசியிருக்க வேண்டும், ஆனால், வைகோ அவ்வாறு பேசவில்லை..” என்றார்.


Also watch: கண்ணைக் கட்டி புத்தகத்தைப் படித்து சாதனை! 

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...