ராகுல் காந்தி மீது தாக்குதல்... மோடி அரசாங்கத்திற்கு சாவு மணி - கே.எஸ்.அழகிரி காட்டம்

ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தியது மோடி அரசாங்கத்திற்கு சாவு மணி அடிக்க காலம் வந்து விட்டதை காட்டுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மீது தாக்குதல்... மோடி அரசாங்கத்திற்கு சாவு மணி - கே.எஸ்.அழகிரி காட்டம்
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி
  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் நேற்று போலீசார் எரித்ததால் நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்த இந்நிலையில் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உள்ளது.

Also Read |  ராகுல் காந்தி மீது தடியடி? நெஞ்சைப் பிடித்த தள்ளிய காவல்துறை - உ.பியில் பெரும் பரபரப்பு

இதுகுறித்து சென்னை மைலாப்பூரில் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, உ.பியில் காட்டாட்சி நடைபெற்று வருகிறது. ஏழை எளிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார். ஒரு வார காலமாக அரசின் எந்த நடவடிக்கையும் இல்லாமல் ராகுல் காந்தி இதில் இறங்கியுள்ளார்.


அவர் மீது தாக்குதல் நடந்தது மோடி அரசாங்கத்திற்கு சாவு மணி அடிக்க காலம் வந்து விட்டதை காட்டுகிறது. மோடி ஆட்சி வீழ்த்தப்படும் என கூறியுள்ளார்.
First published: October 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading