ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரசாரத்தின் போது ஆரத்தி எடுப்பதை தடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

பிரசாரத்தின் போது ஆரத்தி எடுப்பதை தடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

அதிமுக ஆரத்தி தட்டில் பணம் போடுவதை காவல்துறையினர் முதற்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக சென்னை விமான நிலையத்தில் கே.எஸ் அழகிரி குற்றஞ்சாட்டினார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுப்பதை, தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகிற 12-ம் தேதி தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

  குறிப்பாக கிஷ்ணகிரி, விருதுநகர், சேலம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாம் மேற்கொள்ள இருகிறார் என்று கூறிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினும் ராகுல் பிரசாரத்தில் பங்கேற்பார் என்று குறிப்பிட்டார்.

  டெல்லியில் போராட்டம் நடத்திய போது தன்னை பார்க்க வராத பிஜேபி தலைவர் அமித்ஷாவை விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அய்யாகண்ணு சென்று பார்த்தது ஆச்சிரியமாகவும், வருத்தமாகவும் உள்ளது.

  மேலும் விவசாயிகளுக்கு எந்தத் திட்டத்தையும் அறிவிக்காத பாஜக தேர்தல் அறிக்கையை அய்யாகண்ணு வரவேற்பது வியப்பு அளிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

  பாஜக திட்டமிடாமல் திட்டங்களை அறிவித்து வருகிறது என்று கூறிய அவர், அதற்கு மிகப்பெரிய உதாரணம் பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கை என்றார்.

  அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி தொடர்பன முரண்பாடுகளை இப்போது சரி செய்யப்படும் என்று மோடி சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

  ரஜினிக்கு அவர் கருத்து சொல்ல உரிமை உண்டு என்று கூறிய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி நதி நீர் இணைப்பு திட்டத்தை வரவேற்பதாக கூறினார்.

  மேலும் பல மாநிலங்களில் உள்ள நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லை என்றும் ஒரே மாநிலத்தில் ஓடும் நதிகளை மட்டுமே இணைக்க முடியும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

  காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கே பல்வேறு அரசியல்கள் இருக்கிற சூழலில் பல்வேறு மாநில நதிகளை இணைப்பது முடியாத ஒன்று என்று தெரிவித்தார்.

  அதுமட்டுமின்றி இதனை ரஜினி தெரிந்து ஆதரிக்கிறாரா அல்லது தெரியாமல் ஆதரிக்கிறாரா என்று தெரியவில்லை என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

  தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுப்பதை, தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் தனி கவனத்துடன் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆரத்தி தட்டில் பணம் போடுவதை காவல்துறையினர் முதற்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினார்.

  மேலும் தேனி தொகுதியில் தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு பணம் கொடுத்துவிட்டதாக குறிப்பிட்ட கே.எஸ்.அழகிரி, 50 ஆண்டுகளில் இதுவரை காங்கிரஸ் கட்சி எந்தத் தேர்தலுக்கும் பணம் கொடுத்தது இல்லை என்றும் தெரிவித்தார்.

  காங்கிரஸ் ஆட்சியில் தான் 90% வறுமை ஒழிக்கப்பட்டது என்றும், நாட்டிற்கு வளர்ச்சி ஏற்படுவதற்கு முக்கியமான காரணமே காங்கிரஸ் கட்சி என்று கூறினார்.

  அதேபோல் மறு வாக்குப்பதிவு மந்திரி என்று பிரதமர் மோடி பா.சிதம்பரத்தை கொச்சைபடுத்தி கூறியிருப்பது தவறு என்றும், ஒரு பிரதமர் இது போன்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

  Also see...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Candidates, Congress, Election Commission, K.S.Alagiri