சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: August 22, 2019, 8:18 AM IST
சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி
Web Desk | news18
Updated: August 22, 2019, 8:18 AM IST
சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் தொண்டர்கள் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சர்வாதிகார நடவடிக்கைகள் மூலமாக சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.


மத்திய பாஜக அரசு, தனது கைப்பாவையாக மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சிதம்பரத்தை கைதுசெய்திருப்பதைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் கருத்து:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஐ-யின் செயல்பாடு, இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டிப்பதாகவும், விசாரணையின்போது சிதம்பரத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Loading...

மேலும், டுவிட்டரில் பதிவிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பாஜக அரசின் தவறுகளை அம்பலப்படுத்திய சிதம்பரத்தின் கருத்துக்கு கருத்தாக பதில்கூற முடியாமல், கோழைத்தனமான செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஏழைகள் பணத்தை உண்டு களித்தவர்கள் களி உண்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.25 முறை முன்ஜாமீன் பெற்ற சிதம்பரத்தை கைதுசெய்ய தடைவிதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதில், அரசியல் பழிவாங்கல் எங்கே வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.Also See... ராஜிவ் காந்தி படுகொலை கதை!
First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...