முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தென்காசி காதல் விவகாரம்; “யாருடன் செல்கிறேன்..” - கிருத்திகா பட்டேல் அளித்த ரகசிய வாக்குமூலம்..!

தென்காசி காதல் விவகாரம்; “யாருடன் செல்கிறேன்..” - கிருத்திகா பட்டேல் அளித்த ரகசிய வாக்குமூலம்..!

கிருத்திகா பட்டேல் வாக்குமூலம்

கிருத்திகா பட்டேல் வாக்குமூலம்

கிருத்திகா பட்டேல் அளித்த விளக்கம் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு நாளை மதுரை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா பட்டேல் கடந்த மாதம் 25ஆம் தேதி அன்று பெற்றோர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். அவர் கடத்தப்பட்டதாக காதல் கணவர் வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து கிருத்திகா பட்டேல் கடந்த செவ்வாய் கிழமை அன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு ஆஜரானார். கிருத்திகா விளக்கம் அளிக்கும் வகையில் கிருத்திகாவை தென்காசி காப்பகத்தில் தங்கவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தென்காசி குற்றாலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒன் ஸ்டாப் காப்பகத்தில் மூன்று நாட்களாக கிருத்திகா பட்டேல் தங்கி இருந்த நிலையில் இன்று டிஎஸ்பி சுதிர் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் செங்கோட்டை நீதிமன்றத்தில்  நேற்று ஆஜராகினார். நீதிபதி சுனில் ராஜா முன்னிலையில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை ஒரு மணிநேரமாக அளித்துள்ளார்.

இதில் தான் யாரிடம் செல்ல வேண்டும் என்பது குறித்து பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் அளித்த விளக்கம் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு நாளை மதுரை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையானது தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரம் விளக்கம் அளித்த நிலையில் மீண்டும் கிருத்திகா,  காப்பகத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

First published:

Tags: Love marriage, Police, Tenkasi