தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது - கிருஷ்ணசாமி கோரிக்கை

டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகம் முழுவதும் வாக்காளர் களுக்கு 1000, 500 ரூபாய் என்று பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க கூடாது எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழகம் முழுவதும் வாக்காளர் களுக்கு 1000, 500 ரூபாய் என்று பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க கூடாது எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

  இந்நிலையில் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு 500, 1000 ரூபாய் கொடுத்து ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளன. இதுபோன்ற தோ்தலை சந்தித்தது கிடையாது.

  வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் மக்களின் முகபாவனையை மாற்றி விட்டது. பணப்பட்டுவடா செய்வது அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானது. தமிழகம் முழுவதும் இதுபோல் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.

  இந்தியாவில் தேர்தல் ஆணையம் ஒன்று இருக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பிடித்துக் கொடுத்தால் கூட அவா்களை விட்டு விட்டு பிடித்து கொடுப்பவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்கிறது.

  Must Read :  சரத்குமார் - ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை

   

  வாக்குரிமை சுதந்திரம் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க கூடாது” இவ்வாறு கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: