அதிமுக அரசை தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் ஆட்சிக்கு வருவோம்...! கிருஷ்ணசாமி பேச்சு

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

  • News18
  • Last Updated :
  • Share this:
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அதிமுக அரசை தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் UPSC தேர்வர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், தேர்வர்களுக்கு நேர்முக தேர்வினை எதிர்கொள்ள மாதிரி நேர்முக தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், டெல்லியில் நடக்கவிருக்கும் மாதிரி தேர்வை தலைசிறந்த பேராசிரியர்ள் மூலம் பயிற்சி அளிக்க இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெரும் மாதிரி நேர்முக தேர்வுக்கு ஒரு வழி விமான கட்டனம் போன்ற சில பொருளாதார உதவிகளையும் தாம் செய்யவிருப்பதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், TNPSC தேர்வுகளில் வாழ்வை பணயம் வைத்து படிக்கிறார்கள். குறுக்குவழியில் பதவிகளுக்கு செல்பவர்களால் ஏழைகளின் கனவு தகர்க்கப்படுகிறது என்றும், TNPSC இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர நம்பிக்கை தகர்க்கும் அமைப்பாக இருக்க கூடாது என்றார். முறைகேட்டில் கடைநிலை ஊழியர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது தவறானது என்றும் விசாரனையை தீவிரபடுத்த வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.

மேலும், ரஜினியின் அரசியல் வருகை மற்றும் கூட்டணி குறித்த தமிழருவி மணியன் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணசாமி, அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா என்று அழைக்க முடியும். ரஜினி கட்சியே தொடங்காத போது கூட்டணி குறித்து எப்படி பேசமுடியும் முதலில் அவர் கட்சி தொடங்கட்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வருமான வரித்துறை எந்த நடிகரையும் விட்டுவைத்ததில்லை என்றும் விஜய் மீதான சோதனை நடவடிக்கைக்கு அரசியல் கற்பிக்க கூடாது என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் புதிய தமிழகம் கட்சியும் முதல்வர் வேட்பாளரை அறிவித்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார். அதற்கான அனைத்து பணிகளும் நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.

அதிமுக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதிமுக அரசை தூக்கி எறிந்துவிட்டு புதிய தமிழகம் கட்சி ஆட்சிக்கு வரும் எனவும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

வரும் 27-ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் கூட்டம் நடத்த போவதாக தெரிவித்த கிருஷ்ணசாமி தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் உரிமை கோரவில்லை. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தால் தனி ஈழம் கனவு நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: