தேர்தல் பிரசாரத்தில் டிடிவி ஆதரவாளர்கள் இடையூறு - கிருஷ்ணசாமி குற்றசாட்டு!

கிருஷ்ணசாமி

”4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதராவாக செயல்பட்டு, வெற்றி பெறச் செய்வோம்”

 • News18
 • Last Updated :
 • Share this:
  தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர் என்று கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி. பேசுகையில்,  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றது.

  இதில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும், தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதராவாக செயல்பட்டு, வெற்றி பெறச் செய்வோம் என்று கூறிய கிருஷ்ணசாமி, தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்தார்.

  குற்ற பின்னனி கொண்டவர்கள் தனி அமைப்பை தொடங்கி பல்வேறு அவதூறுகளை, தேச விரோத, சமூக விரோத செயல்களை தொடர்ந்து பரப்பினர்.  மேலும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

  காவல் துறையினருக்கு யார் தவறு செய்கிறார்கள் என்று தெரியும். தனது தேர்தல் பிரசாரத்தின் போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் விடாமல் இடையூறு செய்தனர் என்றும், இதனை டிடிவி தினகரன் கண்டிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: