கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முத்துபாரதி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 17 லட்சம் ரூபாய் திட்டமதிப்பீட்டில் 5.95 லட்ச ரூபாய் மானியத்துடன் கடன் பெற்றுள்ளார்.
இந்தக் கடன் தொகையை வைத்து கிருஷ்ணகிரி தொழிற்பேட்டையில் சிறியதாக ஒரு அறை எடுத்து, அதில் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றால் பேஸ்ட் செய்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் பணியைத் தொடங்கினார். தற்போதைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பெண்களுக்கு வேலை பழு குறைவதால் இந்த இஞ்சி, பூண்டு பேஸ்ட் பெண்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றது.
Also read: திருக்குறள் பிரியர்: இளைஞர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர்
இதனை அடுத்து இயந்திரம் மூலம் பாக்கெட் செய்ய தொடங்கி கிருஷ்ணகிரி மாவட்டத்தை கடந்து தருமபுரி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் விற்பனையைத் தொடங்கியுள்ளார். தற்போது 5 பெண்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளதுடன், தனது நிறுவனத்தில் இஞ்சி, பூண்டு பேஸ்டை தொடர்ந்து இந்து உப்பு, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்களையும் பாக்கெட்டில் அடைத்து விற்பனையை செய்கிறார்.
இதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் முத்துபாரதி, பிரதம மந்திரி வேலை உருவாக்கும் திட்டம் மூலம் என்னுடன் சேர்ந்து 5 பெண்களின் குடும்பங்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. மேலும், 20 குடும்பங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.