பெரியார் சிலைக்கு தீ வைத்தவர் கைது.. காரணம் என்னவென்று வாக்குமூலம்

பெரியார் சிலை

தீ வைத்தவர்களை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பெரியார் சிலை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு தீவைத்த முருகவேல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனனர்.

  கிருண்ஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவபுரம் குடியிருப்புகள் கடட்ப்பட்டன. அதன் நுழைவுவாயிலில் நிறுவப்பட்டுள்ள மார்பளவு பெரியார் சிலைக்கு நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர்.

  வாகன டயர் ஒன்றில் நெருப்பை கொளுத்திவிட்டு அதனை பெரியார் சிலை மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் பெரியார் சிலை முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சிலைக்கு தீ வைத்தவர்களை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பெரியார் சிலை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில் பெரியார் சிலைக்கு தீ வைத்தவர் முருகவேல் என்பது தெரியவந்துள்ளது. முருகவேலுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் மதுபோதையில் குளிர் காய்வதற்காக டயரை பற்றவைத்த முருகவேல், அதை தூக்கி வீசும் பொழுது பெரியார் சிலை மேல் விழுந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: