Home /News /tamil-nadu /

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கடந்த 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் கே. அசோக்குமார் 4,80,491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

  • News18
  • Last Updated :
    கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகத் திகழும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 1951-ம் ஆண்டு முதலிருந்தே இயங்கி வருகிறது.

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 7 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை தி.மு.க-வும், 3 முறை அ.தி.மு.க-வும் ஒருமுறை த.மா.க-வும் கைப்பற்றியுள்ளன.

    கடந்த 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் கே. அசோக்குமார் 4,80,491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    தி.மு.க-வின் சின்ன பில்லப்பா 2,73,900 வாக்குகளையும் பா.ம.க-வின் கோ. மணி 2,24,963 வாக்குகளையும் காங்கிரஸின் செல்லக்குமார் 38,885 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

    கிருஷ்ணகிரி தொகுதியில் நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலில் 74.16% வாக்குகளும் 16-வது மக்களவைத் தேர்தலில் 77.68% வாக்குகளும் பதிவாகின.
    Published by:Rahini M
    First published:

    Tags: Elections 2019, Krishnagiri S22p09, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Upper North Tamil Nadu Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி