• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

வெப்பச்சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மதிய வேளையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா. புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 02 புதன் கிழமை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

    மேலும், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

    ஜூன் 03 ஆம் தேதி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

    ஜூன் 4, 5 ஆகிய நாட்களில், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

    ஜூன் 6 ஆம் தேதி, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    வெப்பநிலை முன்னறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர் தர்மபுரி, கடலூர், புதுவை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை, ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில், குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ஜூன் 02 முதல் 06 ஆம் தேதி வரை, தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப் படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : உதவியாளர் முதல் இசைஞானி வரை - இளையராஜா சுவாரஸ்ய தகவல்கள்!

    இந்நிலையில், தென் மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி (நாளை) கேளரவில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: