• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

Youtube Video

ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவன் தற்கொலை செய்து கொண்டதாக அழுது புலம்பி நாடகமாடிய மனைவி போலீசாரிடம் சிக்கியது எப்படி?

 • Share this:
   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உனிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் (37) அய்யப்பன் சரக்கு வாகன ஓட்டுநரான இவருக்கு 25 வயதான ரூபா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மஞ்சுகிரியை சேர்ந்த அய்யப்பனின் அக்கா மகன் 20 வயதான தங்கமணி என்பவர் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ரூபாவுக்கும், தங்கமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. ரூபாவிற்கும் தங்கமணி க்கும் அக்காள் தம்பி உறவு இருந்ததால் உறவுக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை இதனால் இவர்களின் நெருக்கம் அதிகமானது.

  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தங்கமணியுடன், ரூபா வீட்டை விட்டு சென்று விட்டார். உறவினர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழைத்து வந்தனர். மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் வேதனையில் அய்யப்பன் மது பழக்கத்துக்கு அடிமையானார். அதன்பிறகு ரூபாவிற்கும், அய்யப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21ஆம் தேதி ரூபாவின் உறவினர் இறுதி சடங்கிற்கு சென்ற அய்யப்பன், அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அன்று மாலை கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

  இந்தநிலையில் இரவில் அய்யப்பன் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது கையில் கத்தி ஒன்று இருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டதாக ரூபா அழுது நாடகமாடினார். சந்தேகமடைந்த போலீசார் ரூபாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

  அதில் ரூபா, அவருடைய தம்பி முறை கள்ளக்காதலன் தங்கமணி உதவியுடன், அய்யப்பனை தீர்த்து கட்டியது தெரியவந்தது. கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி அய்யப்பன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, மழையின் காரணமாக கிராமத்தில் மின் தடை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி அய்யப்பனை கொலை செய்யத்திட்டமிட்டார் ரூபா கள்ளக் காதலனான தங்கமணியை தொலைபேசியில் பேசி வரவழைத்த ரூபா, போதையில் கிடந்த அய்யப்பனின் கை கால்களை துப்பட்டாவால் கட்டி போட்டுள்ளார்.

  பின் தலையணையை எடுத்து முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டது போல் இருக்க வேண்டும் என்பதற்காக உயிர் போன பிறகு கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, அந்த கத்தியை அய்யப்பனின் கையில் வைத்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள மாமியார் வீட்டக்கு சென்ற ரூபா அய்யப்பன் தன்னை அடித்து விரட்டி விட்டதாக கூறியுள்ளார்.

  சிறிது நேரத்திற்கு பிறகு அய்யப்பன் இறந்தது அனைவருக்கும் தெரிந்த பின், கணவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக அழுது புலம்பி அனைவரையும் நம்ப வைத்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதையடுத்து ரூபாவையும், தங்கமணியையும் போலீசார் கைது செய்தனர்.

  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: