கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவரை தீர்த்துக்கட்டிய கும்பல் - ஒசூர் கல்குவாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

ஒசூர் கொலை

முருகேசனை நேற்று காலை ஒரு கும்பல் காரில் கடத்திச்சென்றுள்ளது.

 • Share this:
  ஒசூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையானவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(50),இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் நீலிமா என்பவரின் காரின் மீது லாரியை மோத விட்டு டிரைவர் உள்ளிட்ட இருவரை கொலை செய்த வழக்கில் 13 வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  Also Read: விவாகரத்து கேட்ட மனைவி.. மாமியாரை குத்திக்கொன்ற மருமகன் - சாத்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

  ஜாமினில் வெளியே வந்த முருகேசனை நேற்று காலை காமன்தொட்டி என்னுமிடத்தில் காரில் வந்த ஒருக்குழு அவரை கடத்தி சென்றதாக சூளகிரி போலிசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
  போலீசார் விசாரித்து வந்தநிலையில், முருகேசன் உடல் ஒசூர் அருகே உள்ள கொல்லப்பள்ளி என்னுமிடத்தில் செயல்படாத கல்குவாரி நீர்குட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப்பழி தீர்க்கப்பட்டாரா அல்லது சொத்து தகராறு காரணமாக கடத்தி கொல்லப்பட்டாரா உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

  ஒசூர் செய்தியாளர்: செல்வா


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: