நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நோட்டா (NOTA) இருந்திருந்திருந்தால், நோட்டாவிற்கும்
பாஜகவிற்குமான போட்டியாக இருந்திருக்கும். 3வது கட்சி என பாஜக கூறிக்கொள்வது தொண்டர்களை உற்சாகப்படுத்தவே என வன்னியரசு விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரில் புறம்போக்கு நிலத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் பட்டா வழங்கிட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வன்னியரசு:
“சுதந்திரம் பெற்ற பின்பும் அடிப்படை வசதிகளுக்காக இன்னும் பூர்வகுடிகள் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை உள்ளது..
தமிழக அரசே, சிவராத்திரியை முன்னிட்டு கோவில் விழாக்களை நடத்துவது மத பரப்புரையாக தான் இருக்கும், இதுவரை தமிழகத்தில் எந்த ஆட்சியிலும் நடக்காதது இது..
Also read: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பொதுக் குழு உறுப்பினரில் இருந்து முதல்வர் வரை.. கடந்து வந்த அரசியல் பாதை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில் பினராயி விஜயன்,ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள நிலையில் 2024 தேர்தலில் மூன்றாவது கூட்டணியாக இல்லாமல் காங்கிரஸ் தலைமையில் ஒன்றினைய வேண்டிய அவசியமாக உள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக மூன்றாவது கட்சி என்கிறதே என்ற கேள்விக்கு..
5,000 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4,000 த்திற்கும் அதிகமான இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. நோட்டா இருந்திருந்தால், பாஜகவிற்கும் நோட்டாவிற்கும் இடையேயான போட்டியாக தான் இருந்திருக்கும்..மூன்றாவது கட்சி என பாஜக கூறிக்கொள்வது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு மட்டுமே என கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்ப்பட்டோர் வன்னியரசு முன்னிலையில் விசிகவில் இணைந்தனர்.
செய்தியாளர்: செல்வா (.ஒசூர் )இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.