சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர்கள்.. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் சொந்த ஊரில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர்கள்.. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் சொந்த ஊரில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
சசிகலாவிற்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் மீண்டும் போஸ்டர்
Sasikala | சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், பெங்களூர் சாலை, சேலம் சாலை, பழைய சப் ஜெயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டதால் அதிமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், பெங்களூர் சாலை, சேலம் சாலை, பழைய சப் ஜெயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில் இந்த தீர்ப்பு தற்காலிகமானதுதான். மோடியா லேடியா என்று கேட்டு மத்திய அரசை எதிர்த்து நின்று ஜெயலலிதாவின் பாதையில் இருந்து மாறி மத்திய அரசுடன் சமரசம் செய்து சட்டத்தை வில்லாக வளைத்து நீதிமன்றத்திலும் சில தற்காலிக வெற்றிகளை பெற்றுள்ளார்கள். மக்கள் மன்றத்தில் நிச்சயம் தோல்வியை சந்திப்பார்கள் எனவும், 38 ஆண்டுகளாக அதிமுகவிற்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் உறுதுணையாக இருந்த சசிகலா ஜெயலலிதாவின் வழியில் மக்கள் மனதை வெல்வார் என வெற்றிவேல் என்பவரின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் சொந்த ஊரிலேயே இந்த போஸ்டர் பல இடத்தில் ஒட்டப்பட்டுள்ளதால் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-செய்தியாளர்: குமரேசன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.