• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி : நாடகமாடியது அம்பலம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி : நாடகமாடியது அம்பலம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்த மனைவி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்த மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, தன் கணவரை தலையில் தாக்கி மனைவியே கொலை செய்துள்ளார்.

  • Share this:
    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த  மனைவி, மதுக்கடை முன்பு உடலை வீசி குடிபோதையில் கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடியது போலிசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூர் கிராமத்தை  சேர்ந்தவர்மாரப்பன் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் மது  பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் நேற்று முன்தினம் (18 ஆம் தேதி) ராயக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது மனைவி குண்டம்மாள் (வயது 35)  ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில், தனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், தன்னிடம் மது குடிக்க பணம் கேட்டார், தான் கொடுக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது கணவர், வேறு யாரிடமோ பணம் வாங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு போதையில் தவறி விழுந்து இறந்துள்ளார் என்று போலிசாரிடம் புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை காவல் கண்கானிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையிலான போலிசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டனர். அதில் மாரப்பனின் தலையில்  காயத்தை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு மாரப்பன் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டத்தில், மாரப்பன் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ராயக்கோட்டை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல் கட்டமாக இறந்து போன மாரப்பனின்மனைவி குண்டம்மாளிடம் விசாரணை நடத்திய போது, அவர் போலிசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம்  விசாரணையை தீவிரபடுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. குண்டமாளுக்கும், சிவசங்கர் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளதாகவும், அதற்கு அவரின் கணவர் மாரப்பன் இடையூறாக இருந்ததால் குண்டம்மாள், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக போலிசாரிடம் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து குண்டம்மாளையும், சிவசங்கரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் குண்டம்மாளுக்கும், மாரப்பனுக்கும் திருமணம் நடந்து 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மாரப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் குண்டமாளுக்கும், ராயக்கோட்டை சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த சிவசங்கர் (31) என்ற விவசாயிக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. சிவசங்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

    இந்நிலையில், சிவசங்கர் மற்றும் குண்டம்மாள் ஆகிய இருவரும் அடிக்கடி தனிமையில்  சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது மாரப்பனுக்கு தெரிய வந்தது. மேலும் அவர் குண்டம்மாளை கண்டித்துள்ளார். இதனால் அவர் இருக்கும் வரையில் நாம்  உல்லாச வாழ்க்கை வாழ முடியாது. எனவே அவரைதீர்த்து விடலாம் என்று கள்ள காதலன் சிவசங்கரிடம் கூறியுள்ளார். மேலும் சிவசங்கரிடம் தனது கணவரை கொலை செய்ய திட்டம்போட்டு குடுத்துள்ளார் குண்டம்மாள்.

    இதனையடுத்து குண்டம்மாள் போட்டு கொடுத்த திட்டத்தின்படி கடந்த 17ஆம் தேதி இரவு, மது குடிப்பதற்காக வெளியே சென்ற மாரப்பனை சிவசங்கர் அழைத்து சென்று அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த குண்டம்மாள் மது போதையில்  இருந்த தனது கணவர் மாரப்பனை, பின்புற தலையில்  இரும்புகம்பியால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

    பின்னர் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடை அருகில் உடலை போட்டு விட்டு  சென்றுள்ளனர். இதையடுத்து மறுநாள், காணாமல் போன தனது கணவரை தேடியதாகவும், அதில் தனதுகணவர் உடல் மதுக்கடை அருகில் கிடந்ததாக குண்டம்மாள் தெரிவித்துள்ளார். தன்னிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்து விட்டு தனது கணவர் சென்றதாகவும், பின்னர் மது போதையில் கீழே விழுந்து இறந்ததாகவும், அனைவரையும் நம்பவைத்துள்ளார்.

    ஆனால் தனது கணவரின் தலையில் இருந்த பலத்தை காயத்தை கொண்டு, அவர்கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்ததை போலீசார் கண்டுபிடித்து தன்னைபிடித்து விட்டனர் என குண்டம்மாள் போலிசாரிடம்  வாக்குமூலம் அளித்துள்ளார்.

    Must Read : முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் மோசடி வழக்கில் கைது

    ராயக்கோட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலன் உதவியுடன் மனைவியே கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் - ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: