பாழடைந்த அரசு பள்ளிக் கட்டடம்.. மரத்தடியில் கல்வி கற்கும் மாணவா்கள்!
பாழடைந்த அரசு பள்ளிக் கட்டடம்.. மரத்தடியில் கல்வி கற்கும் மாணவா்கள்!
பள்ளிக் கட்டடம் பாழடைந்ததால் மரத்தடியில் கல்வி கற்கும் மாணவா்கள்
நீலகிரி கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளியில், கவுண்டனுாா், கொம்பேபள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறாா்கள்.
ஒசூா் அருகே அரசு பள்ளிக் கட்டடம் பாழடைந்துள்ளதால் மாணவா்கள் மரத்தடியில் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். சிதிலமடைந்து காணப்படும் கட்டடத்திற்கு மாற்றாக புதிய கட்டடத்தை அரசு கட்டித் தர வேண்டும் என பெற்றோா் கோாிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை கல்வி வட்டத்திற்குட்பட்டது நாகமங்கலம் ஊராட்சி. அங்குள்ள நீலகிரி கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளியில், கவுண்டனுாா், கொம்பேபள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறாா்கள்.
5 வகுப்புகளுக்கு இரண்டு வகுப்பறைகளே இருக்கும் நிலையில் அதுவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வகுப்பறைக்குள் செல்ல மாணவா்கள் அச்சப்படுவதால் மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நெல்லையில் அரசு உதவிப் பெறும் பள்ளி கழிவறையின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவா்கள் உயிாிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
ஆனாலும், தங்கள் பள்ளியில் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை எனக் கூறும் கிராம மக்கள், ஏம்எல்ஏ மற்றும் அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக முறையிட்டாலும் கட்டடத்தின் வண்ணம் மாறுகிறதே தவிர, தங்களின் எண்ணம் நிறைவேறவில்லை என்கிறாா்கள். கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா் அச்சம் தெரிவிக்கின்றனர்.
-செய்தியாளர்: செல்வா.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.