நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கபடவுள்ள நிலையில் கிருஷ்ணகிரியில் பாட புத்தகம் வினியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி முடப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாட வகுப்புகள் நடைபெற்றது. இதன் இடையே கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வருகின்ற நவம்பர் மாதம் 1ஆ ம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளும் திறக்கபடும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே, பள்ளி கல்வித்துறை சார்பில் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கபடவுள்ள நிலையில் பாட புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணியில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி வட்டார கல்வி மையங்கள் உள்ள 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள 124 அரசு பள்ளிகளுக்கு தமிழ் வழி ஆங்கில வழி பாட புத்தகங்கள் விநியோகம் செய்யபட்டு வருகிறது. இன்று பெத்த தாளப்பள்ளி, துரிஞ்சிப்பட்டி, கங்கலேரி, தின்னகழனி, மாதேப்பட்டி உள்ளிட்ட 64 பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
Must Read : புதுச்சேரி பள்ளிகள் திறப்பு: அரை நாள் மட்டுமே வகுப்பு... வருகைபதிவு கட்டாயமில்லை- அமைச்சர்
இந்தப் பணி நாளையும் நடைபெற வுள்ளது. அதன்படி, மொத்தம் 14 ஆயிரத்தி 427 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் - ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School books, School open