2,000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்தியாவுடனான வணிகத் தொடர்பு - கல்திட்டைகள் கண்டுபிடிப்பு
2,000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்தியாவுடனான வணிகத் தொடர்பு - கல்திட்டைகள் கண்டுபிடிப்பு
கல்திட்டைகள் கண்டுபிடிப்பு
Krishnagiri District | கிருஷ்ணகிரி அருகே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்தியாவுடனான வணிகத் தொடர்பு வைத்திருந்ததை கூறும் வகையிலான கல்திட்டைகள் கண்டுபிடிப்பு.
கிருஷ்ணகிரி அருகே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்தியாவுடனான வணிகத் தொடர்பு வைத்திருந்ததை கூறும் வகையிலான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே பூதிகுட்டை கிராமத்தில் சுமார் 2500 அடி உயரத்தில் உள்ள மலையின் மீது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவண படுத்தும் குழுவினர் மற்றும் மகாராஜகடை மருத்துவர் லோகேஸ் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் சிதைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்து உள்ள கல்திட்டைகள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த கல்திட்டைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரியவந்துள்ளது.
இதில் ஒரு விலங்கின் மீது இருவர் செல்வது போலவும் அருகில் இரு மனித உருவங்களும் கருஞ்சாந்து ஓவியத்தில் வரையப்பட்டுள்ளது. அதேபோல் 3 அடி அகலமுள்ள மயில் போன்ற உருவமும் கருஞ்சாந்து பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. அதேபோல் வெண்சாந்து ஓவியத்தில் தேர் போன்ற அமைப்பு ஒன்றும் உள்ளது.
மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் உள்ளங்கை அச்சும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் மிக முக்கியமானதாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவுடனான வணிக தொடர்பு இருந்ததை கூறும் வகையில் வென்சாந்து ஓவியத்தில் உஜ்ஜயினி குறியீடு உள்ள ஒரு கல்திட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வென்சாந்து ஓவியங்கள் கிடைக்கப்பெறும் ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருஞ்சாந்து மற்றும் வென்சாந்து ஓவியங்கள் ஒரே இடத்தில் கிடைக்கப் பெற்று உள்ளதால் சமகால மனிதர்கள் வாழ்ந்ததை அறிய முடிகிறது என வரலாற்று ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
-செய்தியாளர்: குமரேசன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.