Home /News /tamil-nadu /

இளைஞரின் தலையை துண்டித்து கோயில் முன்பு வீசிச்சென்ற கொடூரம் - அதிர்ச்சியில் கிராம மக்கள்

இளைஞரின் தலையை துண்டித்து கோயில் முன்பு வீசிச்சென்ற கொடூரம் - அதிர்ச்சியில் கிராம மக்கள்

பெயிண்டர் கொலை

பெயிண்டர் கொலை

Hosur Murder: கொலை செய்த  மர்மநபர்கள் உடலை அதே இடத்தில் போட்டுவிட்டு தலையை துண்டித்து ஊரின் நடுவே உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து சென்றது தெரியவந்தது.

    ஓசூர் அருகே பெயிண்டரை கழுத்தறுத்து படுகொலை  செய்து தலையை துண்டித்து கோயில் முன்பு வைத்து சென்ற கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள எழுவபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ( வயது 25) இவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தை, 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரது மனைவி சந்திரிகா தற்போது கர்ப்பமாக உள்ளதால் டெலிவரிக்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    Also Read: கணவனை கொன்று குழிதோண்டிப் புதைத்த மனைவி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த மர்மம்

    இந்த நிலையில் மர்ம நபர்கள் நேற்று இரவு பெயிண்டர் பிரதீப்பை கொலை செய்து அவரது தலையை துண்டித்து, எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் முன்பு வைத்து சென்றனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாகலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து நள்ளிரவில் அங்கு சென்ற போலீசார் தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    Also Read: Loan App மோசடி.. அந்தரங்க மிரட்டலுக்கு ஆளாகும் இளைஞர்கள் - கதறும் மக்கள்

    அவரது உடல் கிடைக்காததால் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று காலை தலை இருந்த மாரியம்மன் கோயிலிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அவரது உடல் கிடந்துள்ளது. அவரை கொலை செய்த  மர்மநபர்கள் உடலை அதே இடத்தில் போட்டுவிட்டு தலையை துண்டித்து ஊரின் நடுவே உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து சென்றது தெரியவந்தது.

    சொத்து பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  கொலை குறித்து தொடர்ந்து பாகலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: செல்வா (ஓசூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Hosur, Murder, Police investigation

    அடுத்த செய்தி