Home /News /tamil-nadu /

தென்பெண்ணை ஆற்றில் பாறைகளுக்கு வைக்கும் வெடிகுண்டை போட்டு மீன்களை பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ

தென்பெண்ணை ஆற்றில் பாறைகளுக்கு வைக்கும் வெடிகுண்டை போட்டு மீன்களை பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ

பாறைகளுக்கு வைக்கும் வெடிகுண்டை போட்டு மீன்களை பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ

பாறைகளுக்கு வைக்கும் வெடிகுண்டை போட்டு மீன்களை பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் பாறைகளுக்கு வைக்கும் வெடிகுண்டுகளை போட்டு வெடிக்க செய்து மீன்களை பிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே எண்ணேகொள் புதூர் வழியாக தென்பெண்ணை ஆறு சென்று கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு செல்கிறது. இந்த ஆற்றில் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் வியாபாரத்திற்காக மீன் பிடித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி ஆற்றில் கட்லெட் மீன், கெளுத்தி மீன் ,ஜிலேபி மீன் ,வவால் மீன், ரோகு மீன் போன்ற ஏராளமான மீன் வகைகள் உள்ளது. இந்த ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கும் அதிக அளவில் மீன்கள் செல்வதால் இந்த மீன்களை இப்பகுதியில்  வசிக்கும் கரையோர கிராம மக்கள் தங்கள் தூண்டில்களிலும் வலைகளிலும்  மீன்களை பிடித்து சென்று விற்பனை செய்து  வருகின்றனர்.

இந்த நிலையில் சில நபர்கள் பாறைகளுக்கு வைக்கும் வெடிகுண்டுகளை  தண்ணீரில் வீசி வெடிக்க வைத்து மீன்கள் இறந்த பிறகு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த நபர்கள் பாறைகளுக்கு  வைக்கும் வெடிகுண்டை  தினமும் ஆற்றில் வெடிக்க வைத்து மீன்களைப் பிடித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் வெடி வைத்து வெடிக்கும் போது  பெரும் அதிர்வுகளுடன் மற்றும் பயங்கர சத்தத்துடன் வெடிப்பதால்  நூற்றுக்கணக்கான மீன்களும்,ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகளும்  இறந்து ஆற்றில் மிதப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ரசாயனம் கலந்த வெடிகுண்டுகள் ஆற்றில் வெடிப்பதால் மீன்களின் முட்டை முதல் சிறு குஞ்சுகள் வரை பாதிப்பதால் மீன்களின் இனப்பெருக்கமும் பாதிக்கிறது அதுமட்டுமில்லாமல்  ஆற்றுத்தண்ணீரும் ரசாயணம் கலந்து மாசுடையும் என்ற ஆபத்தை உணராமல் அப்பகுதியில் உள்ள சில  நபர்கள் இதுபோன்ற தவறான முறையில் மின் பிடித்து வருவது இப்பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது.

Also Read : தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

மேலும் இது போன்று வெடிகுண்டு வெடிக்கச்செய்து  மீன்களை பிடிக்கும் அந்த நபர்கள்  தினமும் நூற்றுக்கணக்கான  மீன்களை பிடித்து சென்று கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, சூளகிரி,ஓசூர் போன்ற  கிராமங்களுக்கு எடுத்து சென்றும்  பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். . இதுபோன்ற பாறைகளுக்கு வைக்கும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து மீன் பிடிக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து ஆற்றில் மீன் வளர்ப்பு மற்றும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த சம்பவத்தை தடுத்து நடவடிக்கை எடுக்க  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் : ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி
Published by:Vijay R
First published:

Tags: Krishnagiri

அடுத்த செய்தி