ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொழிற்சாலைக்குள் காடு... இயற்கையை காக்கும் டிவிஎஸ் நிறுவனம்....

தொழிற்சாலைக்குள் காடு... இயற்கையை காக்கும் டிவிஎஸ் நிறுவனம்....

தொழிற்சாலைக்குள் காடு... இயற்கையை காக்கும் டிவிஎஸ் நிறுவனம்....

காடுகளை அழித்து ஆலைகள் பெருகி வரும் இக்காலத்தில், 50 ஏக்கர் பரப்பளவிலான பசுமை வனத்தை அமைத்து, இயற்கையை பாதுகாத்து வருகிறது ஒரு தொழிற்சாலை...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உலகளவில் இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இயங்கி வருகிறது. இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு சுற்றுச்சூழல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், அதன் தலைவர் வேணு ஸ்ரீனிவாசனின் வழிகாட்டுதலின்படி, 50 ஏக்கர் பரப்பளவில் இயற்கைச் சூழல் மிகுந்த பசுமை நிறைந்த வனத்தை உருவாக்கியுள்ளது.

  ஒசூர் நிறுவன வளாகத்திலேயே உருவாக்கப்பட்ட இந்த வனத்திற்கு "SACRED FOREST" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், பறவைகள் சரணாலயம், பட்டாம்பூச்சித் தோட்டம், தாவரவியல் பூங்கா, கரிம உர மையம், 18 நன்னீா்க் குளங்களுடன் பசுமை படா்ந்ததாக காட்சியளிக்கிறது இந்த வனப்பகுதி. தற்போது வரை 442 வகையான தாவரங்களுக்கும், 291 வகையான விலங்குகளுக்கும் இயற்கை வாழ்விடமாக அமைந்துள்ளது இந்த சேக்ரட் ஃபாரெஸ்ட். மேலும் பெலிகன் பறவைகளை ஈா்க்கும் புதிய நீா் வாழ்விடத்தையும் இந்த வனப்பகுதி கொண்டுள்ளது.

  இவை தவிர ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2,500 மரக்கன்றுகளை இந்த நிறுவனம் நட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளின் பசி தீா்க்கும் வகையில் நாவல், அத்தி, மா, பாதாம், நெல்லி, கொய்யா போன்ற பழ மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த வனப்பகுதியை பாதுகாக்க முழுநேரமாக இயற்கை ஆர்வலர் நியமிக்கப்பட்டுள்ளார். வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக, எந்தவொரு கழிவையும் காட்டில் கொட்டவோ, எரிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க...       பிரதமர் நரேந்திர மோடி உடன் ஆளுநர் இன்று மாலை சந்திப்பு... ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமனமா?

  பறவை இனங்களின் உணவிற்காக ஒரு லட்சம் மீன் குட்டிகள் வளர்க்கப்படுவதாக கூறும் டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனத்தின் துணைத்தலைவர் வெங்கடேசன், சிட்டுக்குருவிகளை காக்கும்விதமாக கூடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Green Heroes, Krishnagiri, TVS